விழுப்புரம் அக், 17
திண்டிவனம் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த பாராளுமன்ற உறுப்பினர் அமித் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திண்டிவனம் துணை ஆட்சியராக கட்டா ரவி தேஜா நியமனம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் நேற்று திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் உள்ள துணை ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்று கொண்டார். அவருக்கு திண்டிவனம் வட்டாட்சியர் வசந்த கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.