திருப்பூர் அக், 19
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் பயிற்சி பெற்று வந்த துணை ஆட்சியர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டனர். அதன்படி திருப்பூர் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த பண்டரிநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் துணை ஆட்சியராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் பணி நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து புதியதாக நியமிக்கப்பட்ட ஸ்ருதன்ஜெய் நாராயணன் திருப்பூர் துணை ஆட்சியராக இன்று காலை பதவி ஏற்றார். இவர் நடிகர் சின்னிஜெயந்தின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.