திருப்பூர் அக், 18
திருப்பூர் மாவட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 6 வது மாவட்ட மாநாடு தாராபுரம் ஜோதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக தாராபுரம் தளவாய்பட்டிணம் சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணி தொடங்கிய பேரணி பெரியகடைவீதி, பொள்ளாச்சி சாலை, அமராவதி ரவுண்டானா வழியாக மாநாட்டு மண்டபத்தை அடைந்தது. அங்கு சங்கத்தின் மூத்த முன்னோடி எஸ்.மல்லப்பன் கொடியேற்றி வைத்தார். பின்னர் மாவட்ட துணை செயலாளர் ஏ.சண்முகம் தலைமை மாநாடு நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் சுந்தரம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநாடு வரவேற்புகுழு செயலாளர் கனகராஜ் வரவேற்றார். சங்கத்தின் மாநில செயலாளர் பழனிச்சாமி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
பின்னர் விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நகர்ப்புற வேலைத்திட்டத்தை அனைத்துப் பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்திடவேண்டும். 60 வயதான அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்கவேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் வரவேற்புக்குழு தலைவர் வெங்கட்ராமன் நன்றி தெரிவித்தார். முன்னதாக தாராபுரம் ஓட்டல் தொழிலாளர்கள் சார்பில் மாநாட்டு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது