திருப்பூர் அக், 22
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன் ரூ.60 கோடி மதிப்பில் புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை அமைப்பது தொடர்பாக ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், தன்னார்வலர்கள், தொழில் அமைப்பினருடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட ஆட்சியர் வினீத், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.