கன்னியாகுமரி அக், 19
காவல்துறையில் பொதுமக்களுக்கு தீர்வு காணப்படாமல் இருக்கும் நீண்ட நாள் புகார் மனுக்கள் மீது தீர்வு காணகுறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் குளச்சல், இரணியல், மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி, வெள்ளிச்சந்தை ஆகிய காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார் மனுக்களுக்கு தீர்வு காணும் முகாம் குளச்சலில் நடந்தது.
இதில் குளச்சல் காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தர மாணிக்கம், ஆய்வாளர் கிறிஸ்டி, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேமா மற்றும் துணை ஆய்வாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் 54 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.