நெல்லை அக், 18
அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து பொது இ சேவை மையங்களும் கடந்து ஒரு மாத காலமாக செயல் இழந்து காணப்படுவதால் அப்பகுதியில் வாழும் மக்கள் வாரிசு சான்றிதழ் பிறப்பு இறப்பு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் எடுப்பதற்கு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்
பொதுவாக வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்கள் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் அரசு அலுவலகத்திற்கு நேரில் வந்து செல்ல வேண்டிய சிரமம் குறைப்பதற்காக தொடங்கப்பட்டதே இ சேவை மையம். குறிப்பாக ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் குடும்ப உறுப்பினர்களுக்கு உண்டான சான்றிதழ், பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஓய்வூதிய திட்டம் திருமணம் ஆகாத பெண்களுக்கு ஓய்வூதிய திட்டம், விதவை மறுமண பாதுகாப்பு திட்டத்திற்கு பதிவு செய்தல் வழங்கப்படும் கலப்பு திருமணச் சான்றிதழ் போன்றவற்றிற்கு இ-சேவை மூலம் பொதுமக்கள் பதிவு செய்வது வழக்கம்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வருவாய் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ சேவை மையம் மற்றும் அதன் ஒப்புதல் பெற்ற விக்கிரமசிங்கபுரம் கல்லிடைக்குறிச்சி வீரவநல்லூர் சேரன்மகாதேவி பகுதிகளில் உள்ள இ சேவை மையங்கள் கடந்த ஒரு மாத காலமாக முடங்கி நிலையில் தற்போது வரை சரி செய்யப்படாமல் காணப்படுகிறது.
எனவே இதனை உடனடியாக சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.