எலாந்தூர்அக், 15
கேரளத்தில் இரண்டு பெண்களை நரபலி கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் முக்கிய குற்றவாளி சஃபி மற்றும் பகவல் – லைலா தம்பதி கைது செய்யப்பட்ட நிலையில், எலாந்தூர் கிராமத்தில் வீட்டைச் சுற்றி சிறப்புப் படையினர் தோண்டி வருகிறார்கள்.
குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில், இதுவரை அவர்கள் எது பற்றியும் வாய்திறக்கவில்லை என்றும், ஆனால், இந்த வழக்கில் இரண்டு பெண்கள் அல்லாமல் மேலும் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிப்பதால், குற்றவாளிகளின் எலாந்தூர் கிராமத்தில் உள்ள வீட்டைச் சுற்றிலும் பள்ளங்கள் தோண்டப்படு வருகிறது.