வேலூர் ஆகஸ்ட், 4
வேலூர் கோட்டத்தில் உள்ள 151 தபால் நிலையங்களில் ரூ.25-க்கு தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது. தேசிய கொடி இந்திய நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக வருகிற 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து வீடுகள், அரசு அலுவலங்களில் தேசியக் கொடியேற்ற வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே அதற்கு தேவையான கொடிகள் மக்களுக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.25-க்கு விற்பனை வேலூர் தபால் கோட்டத்தில் உள்ள வேலூர் தலைமை தபால் அலுவலகம் உள்பட 151 தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை தொடங்கி உள்ளது.
வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் இதற்கான சிறப்பு கவுண்ட்டரை கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன் திறந்து வைத்தார். மேலும் முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பாஜக.வினர் மற்றும் பொதுமக்கள் பலர் கொடிகளை வாங்கிச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் தலைமை தபால் நிலைய அதிகாரி பார்வதி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் செல்வகுமார், வீரன் மற்றும் அஞ்சல்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். வேலூர் கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் விற்பனை செய்வதற்காக 10,500 தேசியக் கொடிகள் வரவழைக்கப்பட்டுள்ளது. ஒரு தேசியக்கொடி 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
#Vanakambharatham#Nationalflagsale#news