வேலூர் ஆகஸ்ட், 3
அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடக்க விழாவுக்கு மருத்துவமனையின் குழந்தைகள் நலத்துறை தலைவர் தேன்மொழி தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணை முதல்வர் கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மருத்துவ கல்லூரி டீன் செல்வி கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்து பேசினார்.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உலக தாய்ப்பால் வார உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மருத்துவ கல்லூரி மாணவர்களின் நடன நிகழ்ச்சி மற்றும் பட்டிமன்றம் நடைபெற்றது. இதில்தோல் மருத்துவ பிரிவு டாக்டர் பாலச்சந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். வருகிற 7-ம்தேதி வரை தொடர்ந்து விழா நடக்கிறது