காஞ்சிபுரம் அக், 14
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரசங்கால் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை பல்வேறு மாநிலத்தை சேர்ந்த மத்திய குழுவினர் பார்வையிட்டனர். ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையின் செயலர் வினி மகாஜன் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் முதன்மை செயலர் அமுதா, மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளனர்.