தர்மபுரி அக், 14
தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலானத்தினை இன்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் அதியமான் கோட்டை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து போக்குவரத்து சேவையினை தொடங்கி வைத்து பேருந்து பயணிகளுக்கு பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார்கள். அருகில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சரவணன், கோட்ட பொறியாளர் ராஜதுரை, உதவி பொறியாளர் சரவணன் உட்பட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.