விழுப்புரம் அக், 14
விழுப்புரம் மாவட்டம் தென்பசார் கிராமத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் லோகநாதன் என்பவரின் வயலை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது வயலில் 7.5 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா, கருப்புகவுனி ஆகிய பாரம்பரிய நெல் வகைகளை பார்வையிட்டார். பின்னர் பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், மீன்அமிலம், தேமோர் கரைசல் ஆகிய வளர்ச்சி ஊக்கிகளையும் வேப்பங்கொட்டை சாறு, பூண்டு கரைசல், வேம்பு புங்கன் கரைசல் ஆகிய இயற்கை பூச்சி விரட்டிகளையும் பயன்படுத்தி அதிக மகசூல் பெறுமாறு அறிவுரை வழங்கினார்.
மேலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அங்ககச்சான்று முறையில் பயிரிட விரும்பும் விவசாயிகள் பதிவு செய்வதற்கு விழுப்புரம் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அல்லது அங்ககச்சான்று ஆய்வாளரையோ தொடர்புகொண்டு பயன்பெறலாம் என்றார். இந்த ஆய்வின்போது அங்ககச்சான்று ஆய்வாளர் லாவண்யா உடனிருந்தார்.