திண்டுக்கல் அக், 13
திண்டுக்கல் திமுக துணை பொதுச்செயலாளராக 2- வது முறையாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து நேற்று மாலை திண்டுக்கல் வந்த அமைச்சர் பெரியசாமிக்கு சீலப்பாடி ஆயுதப்படை மைதானம் அருகே திமுக கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், வேடசந்தூர் சட்ட மன்ற உறுப்பினர் காந்திராஜன், மாநகராட்சி மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா, துணை செயலாளர்கள் நாகராஜன், பிலால், மேரி, பொருளாளர் சத்தியமூர்த்தி, அவைத்தலைவர் காமாட்சி, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், ஒன்றியக்குழு தலைவர் ராஜா, மாநகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.