தர்மபுரி அக், 13
தர்மபுரி அருகே வத்தல்மலையில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கினார். பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை ஆட்சியர் சித்ரா விஜயன் வரவேற்று பேசினார்.
மேலும் இம்முகாமில் பல்வேறு துறைகளில் சார்பில் 247 பேருக்கு ரூ.2 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.