ஈரோடு அக், 12
சத்தியமங்கலத்தில் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் பூக்கள் ஏலம் நடைபெறும். சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். வழக்கம்போல் நேற்று காலையில் பூக்கள் ஏலம் நடைபெற்றது.
இந்த ஏலத்தில் சம்பங்கி பூக்கள் முதலில் கிலோ 10 ரூபாய்க்கும், அதன்பின்னர் அதற்கு கிழேயும் ஏலம் போனது. இதுபற்றி தகவல் அறிந்த பெரியகுளம் பகுதி விவசாயிகள் பூக்களை மார்க்கெட்டுக்கு கொண்டு வராமல் வேதனையுடன் அங்குள்ள சாலையோர பள்ளத்தில் கொட்டினார்கள்.