நெல்லை அக், 11
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டு ரூ.369 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பணிகள் மந்த நிலையில் நடந்து வந்தது . தற்போது இந்த திட்டத்திற்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு பணி கள் மும்முரமாக நடந்து வருகிறது.வருகிற மார்ச் 31- ந்தேதிக்குள் நதிநீர் இணைப்பு திட்டம் நிறை வேற்றப்படும் என்று சமீபத்தில் நெல்லைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில் நெல்லை பொன்னாக்குடி அருகே நான்கு வழிச்சாலைக்கு மாற்றுப் பாதை அமைக்கப் பட்டு வருகிறது. இதில் தற்காலிகமாக தண்ணீர் செல்லும் வகையில் குழாய்க ளும் அமைக்கப்பட்டு வருகி றது. இந்த பணிகளை சபாநாயகர் அப்பாவு மற்றும் கலெக்டர் விஷ்ணு உள்ளிட்ட அதிகாரிகள் இன்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, கண்காணிப்பு பொறி யாளர்கள் செல்வ ராஜ், பத்மா, செயற்பொறி யாளர்கள் பழனிவேல், அண்ணாதுரை, திருமலை குமார், ஒப்பந்ததாரர் முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஆலோசனையின் பேரில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் கணேசன், நளன், சங்கரபாண்டியன் மற்றும் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தால் மற்றும் பலர் உடன் சென்றனர்.
