காஞ்சிபுரம் அக், 10
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழை நீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. காஞ்சிபுரம் பஸ்நிலையம் பின்புறம் உள்ள சி.எஸ்.ஐ. மிஷன் மருத்துவமனைக்கு உள்ளே நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணியை காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் இந்த ஆய்வின் போது மாநகராட்சி பணிக்குழு தலைவர் சுரேஷ், மாநகராட்சி என்ஜினீயர் கணேசன், உதவி என்ஜினீயர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.