காஞ்சிபுரம் அக், 8
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா. கூலித்தொழிலாளி. இவரது மகன்களும் தங்களது குடும்பத்தினருடன் தனியாக வசித்து வரும் நிலையில் வசந்தா 10 ஆடுகளை வளர்த்து அதில் ஈட்டக்கூடிய வருவாயில் தனது பிழைப்பை கழித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் வளர்த்து வந்த ஆடு 2 குட்டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்டிக்கு 4 கால்களும் இல்லாமல் இருந்தது. இதை அந்த பகுதி மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். 4 கால்களுமின்றி இருந்துவரும் இந்த ஆட்டுக்கு தமிழக கால்நடைத்துறை உரிய சிகிச்சைகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வசந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.