நெல்லை அக், 10
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகேயுள்ள கீழச்செவல் பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதினர் பெரும்பாலும் நெல், வாழை, மஞ்சள் உள்ளிட்டவற்றையே பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதிக்கு செல்லகூடிய சாலையில் இருபாலங்கள் உள்ளன தற்போது அப்பாலம் இடிந்து 6 மாதம் ஆகிறது இதனால் இப்பகுதி மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றிதான் செல்ல வேண்டும் நிலை உள்ளது.
இதனால் இப்பகுதிக்கு பேருந்து வசதியும் கிடையாது, கனரக வாகனங்களும் சென்று வருவதில்லை, இதனால் இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இப்பகுதிக்கு செல்லக்கூடிய இந்த குறுகிய சாலையில் இரு பாலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று எப்போது வேண்டுமனாலும் இடிந்து விழும் நிலையிலும், மற்றொரு பாலம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இடிந்து தரைமட்டத்திலும் காணப்படுகிறது.
இதனால் இப்பகுதியினர் மிகுந்த அவதியடைந்துள்ளனர், இதுதொடர்பாக பேரூராட்சி, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.
எனவே வரும் மழை காலங்களுக்குள் பாலத்தை சரி செய்து தர உடனடியாக எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையிலுள்ள பாலத்தை சரிசெய்யவும், இடிந்து நிலையில் காணப்படும் தரைமட்ட பாலத்தை மீண்டும் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
