சென்னை அக், 9
சீதக்காதி அறக்கட்டளை இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு நிலைய சார்பாக ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா நினைவு விழா நாளை மாலை 6:15 மணியளவில் சென்னை பைகிராப்ட்ஸ் கார்டன் ரோடு, கிரசன்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.
இவ்விழாவில் சமூக நல்லிணக்கத்திற்கான விருது பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் மற்றும் கவிஞர் வீரபாண்டியன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் ஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா இலக்கியப் பரிசு சேயன் இப்ராஹிம் மற்றும் தேங்கை ஷர்புத்தின் மிஸ்பாஹி இருவருக்கும் வழங்கப்பட உள்ளது.
மேலும் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் கலந்து கொள்ள உள்ளார். சிறுபான்மையினர் நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
இதில் முன்னாள் நீதியரசர் அக்பர் அலி தலைமை ஏற்று நடத்த உள்ளார். சீதக்காதி அறக்கட்டளை செயலாளர் ஏ கே புகாரி முன்னிலையில், A.K. புகாரி ஆலிம் அரபுக் கல்லூரியின் முதல்வர் செய்யது மஸ்வூது ஜமாலி வரவேற்புரை ஆற்றுகிறார்இதனைத் தொடர்ந்து, கீழக்கரை M.E.K. உமர் அப்துல் காதர் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி சிறப்பிக்க உள்ளார்.
இந்நிகழ்ச்சி முடிவில் ஜலால் அவர்கள் நன்றியுரை ஆற்றுகிறார்.