திருவள்ளூர் அக், 9
வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைக்க இடவசதி, அதிக மழையால் பாதிக்கப்படும் இடங்கள், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள், தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகள் போர்க்கால அடிப்படையில் துரிதமாக நடந்து வருகிறது.
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தேவையான சாலைகள் சேதமடைதல், ஏரி, குளங்கள் உடைப்பு ஏற்பட்டால் உடனடியாக அதனை தடுக்க முன்னேற்பாடு பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள ஏதுவாக 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் முட்டைகளை கட்டி தயார் செய்யும் பணியில் முழுவீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது.