Spread the love

கர்நாடகா அக், 9

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ”பாரத் ஜோடோ யாத்ரா” என்ற இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முன்பு கடந்த செப்டம்பர் 7 ம்தேதி தொடங்கினார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ள ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தமிழகம், கேரளாவை தொடர்ந்து கர்நாடகத்தில் தற்போது நடந்து வருகிறது.

இதற்கிடையே, ஒரு மாதத்தை கடந்து பாதயாத்திரை செல்லும் ராகுல்காந்தி நேற்று துமகூர் மாவட்டத்துக்குள் நுழைந்தார். அவருக்கு துமகூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹரிதாசனஹள்ளி பகுதியில் ராகுல்காந்தி நேற்று பாதயாத்திரையை நிறைவு செய்தார்.

இந்தநிலையில், இன்று 32வது நாளாக கர்நாடக மாநிலம் தும்கூர், திப்டூரில் இருந்து கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் நடைபயணத்தை ராகுல்காந்தி தொடங்கியுள்ளார். இந்த நடைபயணத்தில் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர். தும்கூர், திப்டூர் பகுதியில் பயணத்தை தொடங்கிய ராகுல்காந்தி சிக்கன்யகஹள்ளி பகுதியில் நிறைவு செய்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *