பெங்களூரு அக், 9
கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிக்கபல்லாபுராவின் புறநகரில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது.
இந்நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சிக்கபல்லாபுராவின் புறநகரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு முன்னிலையில் நாக மண்டபத்தை நேற்று திறந்து வைத்து, ஈஷா அறக்கட்டளையின் ஆன்மீகப் பணிகளை துவக்கி வைத்தார்.
மேலும் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் ஆகியோர் ஆரத்தி செய்து மலர்களை தூவி வழிபாடு செய்தார்.