புதுச்சேரி அக்டோபர், 8
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
பூமியில் உள்ளவர்களிடம் கருணை காட்டுங்கள் வானத்தில் உள்ளவர் உங்கள் மீது கருணை காட்டுவார் கருணைக்கு நற்கூலி உண்டு என்று மனித குலத்திற்கு வாழ்வின் அறநெறிகளை வகுத்துக் கொடுத்த இறைத்தூதர் நபிகள் நாயகம் அவதரித்த நாளை இஸ்லாமிய சகோதர சகோதரிகள் மிலாடி நபியாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்த நன்னாள் இஸ்லாமிய மக்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்து சிறப்பான வாழ்வை வழங்கும் நாளாக அமையட்டும் அதற்கு இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் ஆசையும் அருளும் துணை நிற்கட்டும் எனக் கூறி அனைவருக்கும் மிலாடி நபி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.