புதுடெல்லி அக், 8
பல்வேறு நாடாளுமன்ற நிலை குழுக்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. உள்துறை தொடர்பான நிலை குழு தலைவர் பதவியையும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிலை குழு தலைவர் பதவியையும் காங்கிரஸ் இழந்தது அப்பதவிகளை வகித்து வந்த அபிஷேக் சிங்வி, சசிதரூர் ஆகியோர் பதவி இழந்தனர்.
இருப்பினும் வர்த்தகம் தொடர்பான நாடாளுமன்ற நிலை குழு தலைவர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அதற்கு அபிஷேக் சிங்கள் பெயரை காங்கிரஸ் கட்சி நேற்று சிபாரிசு செய்தது. அதனால் அபிஷேக் சிங்கிள் அப்பதவியில் நியமிக்கப்படுகிறார். ரசாயனம் மற்றும் உரம் தொடர்பான நாடாளுமன்ற நிலை குழு தலைவர் பதவியும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. அதற்கு இதுவரை யாரும் சிபாரிசு செய்யப்படவில்லை.