திருவாரூர் அக், 8
திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட கச்சனம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது நெல் கொள்முதல் பதிவேடு, சாக்குக்கள் இருப்பு பதிவேடு ஆகியவைகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து நெல் ஈரப்பதம் கண்டறியும் கருவியின் செயல்பாட்டினையும், நெல் மூட்டை எடைஎந்திரத்தின் செயல்பாட்டினையும் ஆய்வு செய்து விவசாயிகளுடன் நெல் கொள்முதல் தொடர்பாக கலந்துரையாடினார். பல்நோக்கு பேரிடர் மையம் தொடர்ந்து முத்துப்பேட்டை அருகே கற்பகநாதர்குளம் கிராமத்திலுள்ள பல்நோக்கு பேரிடர் மையத்தை பார்வையிட்டு அங்கு சாய்தளம், குடிநீர், கழிவறை, மின்சார வசதிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, வட்டாட்சியர் மலர்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, கமலராஜன் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.