தஞ்சாவூர் அக், 4
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிய கட்டிடங்கள், பாத மருத்துவ மையம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தொடக்கவிழா நேற்று காலை நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், பாராளுமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சட்ட மன்ற உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், நீலமேகம், அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பாத மருத்துவ மையம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.