தஞ்சாவூர் அக், 3
ஆடுதுறை பேரூராட்சியில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்- அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சியில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் 501 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.இவ்விழாவிற்கு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமை தாங்கினார். கும்பகோணம் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, திருவிடைமருதூர் வட்டாட்சியர் சுசீலா, ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் மணிமாறன், பேரூராட்சி துணைத் தலைவர் கமலா, நகர் மன்ற உறுப்பினர் இளங்கோவன், ஒன்றிய நகர் மன்ற தலைவர் மருதையன், ஆடுதுறை வர்த்தக சங்க நிர்வாகி அழகு பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேரூராட்சி நகர்மன்றத் தலைவர்கள் சபீம் நிஷா, முத்து பீவி, பரமேஸ்வரி, சுகந்தி, பால தண்டாயுதம், மாலதி, மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். முடிவில் செயல் அலுவலர் சிவலிங்கம் நன்றி கூறினார்.