விருதுநகர் அக், 1
விருதுநகர் யூனியன் கூரைக்குண்டு பஞ்சாயத்து சார்பில் அல்லம்பட்டியில் போதைப்பொருள் தடுப்பு பேரணியை மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார்.
அப்போது மாணவர்கள் இளமைப்பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும். போதைப்பழக்க வழக்கங்கள் பாவச் செயலாகும். போதை பொருள் உபயோகிப்பதை தடுப்பதற்கும், அதனை ஒழிப்பதற்கும், மற்றவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும் பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அல்லம்பட்டி காமராஜர் அருகில் தொடங்கிய பேரணி மீண்டும் காமராஜர் சிலை அருகில் வந்து நிறைவடைந்தது.
முன்னதாக மாணவ-மாணவிகள் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பேரணியில் திட்ட இயக்குனர் திலகவதி உதவிஇயக்குனர் உமாசங்கர், கூரைக்குண்டு பஞ்சாயத்து தலைவர் செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.