விருதுநகர் செப், 29
விலைவாசி உயர்வை கண்டித்து சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக. பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமை தாங்குகிறார். இதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிமுக. தலைமை நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.