திருவனந்தபுரம் செப், 28
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்திய அணியுடன் டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. முதலில் டி20 போட்டி தொடர் நடக்கிறது. முதல் போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வென்ற உற்சாகத்துடன் இந்திய அணி களம் இறங்குகிறது. பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியும் வலுவான நிலையில் உள்ளது. இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இதுவரை 20 டி20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 11 முறையும், தென் ஆப்பிரிக்கா 8 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.