துபாய் செப், 27
20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. இதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை வென்ற இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. அத்துடன் 2வது இடத்தில் உள்ள இங்கிலாந்து முன்னிலை கண்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி 3வது இடத்திலும், பாகிஸ்தான் 4வது இடத்திலும், நியூசிலாந்து 5வது இடத்திலும் தொடருகின்றன.