புதுக்கோட்டை செப், 27
கறம்பக்குடி மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க கோரியும், கூடுதல் மருத்துவ உபகரணங்களுடன் மேம்படுத்த வலியுறுத்தியும் கறம்பக்குடி சீனி கடைமுக்கம் பகுதியில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முகமதுஜான் தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் செல்லசாமி, மாநில துணை செயலாளர் துரைமுகம்மது ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தோழமை கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.