புதுக்கோட்டை செப், 24
நவராத்திரி விழா இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் நவராத்திரி விழாவும் ஒன்றாகும். மகிஷாசூரன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்திய போது, தங்களைக் காப்பாற்றி அருளுமாறு அன்னை ஆதிபராசக்தியிடம் அனைவரும் முறையிட்டனர்.
இதையடுத்து, ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு அரக்கனை அழித்ததே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பெண்கள் விரதம் இருந்து பூஜை செய்வது உண்டு. வீடு மற்றும் கோவில்களில் கொலு வைத்து வழிபாடு நடத்துவதும் உண்டு. மேலும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும்.
இந்த ஆண்டு நவராத்திரி விழா நாளை மறுநாள் திங்கட்கிழமை தொடங்குகிறது. வருகிற 4 ம்தேதி ஆயுத பூஜையும், 5 ம் தேதி விஜயதசமி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. கொலு பொம்மைகள் இந்த நிலையில் பண்டிகையையொட்டி கொலு பொம்மைகள் விற்பனை புதுக்கோட்டையில் மும்முரமாக நடந்து வருகிறது.
மேலும் சிறிய அளவிலான முதல் பெரிய அளவிலான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. சாமி பொம்மைகள், கால்நடைகள் பொம்மைகள், மனித உருவ பொம்மைகள் உள்ளிட்டவை விற்பனையாகுகிறது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். வருகிற 26 ம்தேதி முதல் வீட்டில் அடுக்கி வைத்து வழிபாடு நடத்தி பூஜை செய்வது உண்டு. இதேபோல் கோவில்களிலும் கொலு வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.