தர்மபுரி செப், 23
நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டையில் வள்ளல் அதியமான் கோட்ட வளாக பகுதியில் ஈரடுக்கு நூலக கட்டிடம் அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. மாவட்ட நகர் மன்ற உறுப்பினர் மாது சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் சாந்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், சட்ட மன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.49 லட்சம் மதிப்பீட்டிலான ஈரடுக்கு மேம்பால பூமி பூஜையை தொடங்கி வைத்தனர்.