அரியலூர் செப், 23
மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவுபடி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா சிலையில் தொடங்கிய இந்த ஊர்வலம் மாதா கோவில் சந்திப்பு வரை சென்று நிறைவடைந்தது.
இதில் சுமார் 200 ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை அரியலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் தொடங்கி வைத்து, ஓட்டுனர்கள் விபத்தில்லா சாலை பயணம் மேற்கொள்வதுடன், அதிவேகமாக வாகனத்தை இயக்குவது மற்றும் மதுபோதையில் வாகனத்தை இயக்குவது உள்ளிட்டவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என எடுத்துரைத்தார். இதில் அரியலூர் காவல் ஆய்வாளர் கோபிநாத், நகர போக்குவரத்து ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.