கோயம்புத்தூர் செப், 20
துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.
இதற்கிடையில் அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொது பணியாளர்கள் சங்கத்தினர் ஊதிய உயர்வு கேட்டு மனு கொடுக்க வந்தனர். அப்போது திடீரென்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.