Spread the love

விழுப்புரம் செப், 20

சங்ககால மக்கள் விழுப்புரம் அருகே உள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மேற்புற களஆய்வு மேற்கொண்டார். அப்போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககால மக்கள் பயன்படுத்திய பொருட்களை கண்டறிந்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, தென்பெண்ணையாற்று கரையில் களஆய்வு மேற்கொண்டபோது சங்ககால மக்கள் பயன்படுத்திய அகல்விளக்கு, சுடுமண் தாங்கி, கெண்டிமூக்கு பானை, குறியீடு உள்ள பானை ஓடு, சிவப்பு நிற வழவழப்பான உடைந்த பானைகள், பானையின் மூடிகள், சுடுமண் பழுப்பு, சிதைந்த நிலையில் 5-க்கும் மேற்பட்ட உறைகிணறுகள், முதுமக்கள் தாழியின் உடைந்த பானைகள், சங்ககால செங்கற்கள் ஆகியவை கண்டறியப்பட்டன. தொல்லியல் தடயங்கள் மதுரை கீழடி பகுதிகளில் கிடைத்தது போலவே இங்குள்ள தென்பெண்ணையாற்றில் பழங்கால மக்கள் வாழ்ந்ததற்கான ஏராளமான தொல்லியல் தடயங்கள் கிடைத்து வருகின்றன.

ஆகவே தென்பெண்ணை ஆற்றங்கரை சங்ககால மக்களின் வாழ்விடமாகவும் இருந்து இருக்கின்றது என்று நமக்கு கிடைக்கின்ற தொல்லியல் தடயங்கள் மூலம் அறிய முடிகிறது என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *