நெல்லை செப், 18
உலக ஓசோன் தினத்தை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகமும், நெல்லை நீர்வளம் அமைப்பு மற்றும் அகத்தியமலை மக்கள் சார் மையம் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடத்தினர். போட்டியில் நூற்றுஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ஓவிய போட்டியின் பரிசளிப்பு விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
