தர்மபுரி செப், 17
ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 111 அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 6,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா நடந்தது.
பாலக்கோடு தெற்கு ஊராட்சி ஒன்றிய அண்ணா தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், சட்ட மன்ற உறுப்பினர்கள் மணி, வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தடங்கம் சுப்ரமணி, பேரூராட்சி தலைவர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் ஆட்சியர் சாந்தி தலைமை தாங்கி குழந்தைகளுக்கு காலை உணவு பரிமாறி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட அரசு வழக்கறிஞர் முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குனர் பாபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ரவி, பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, தாசில்தார் ராஜசேகரன், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பானு சுஜாதா, ஒன்றியக்குழு துணை தலைவர் பிரபாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.