நெல்லை செப், 15
நெல்லை மாவட்டம் திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் சங்க 5 ம் ஆண்டு விழா மற்றும் தேசிய பொறியாளர்கள் தினவிழா செல்வமருதூர் தொடக்கபள்ளி யில் சங்க தலைவர் ஆனந்தராஜ் தலைமையில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை ராஜ சுந்தர பாய் முன்னிலை வகித்தார். ஆசிரியர் ஜார்ஜ் ஸ்டீபன்சன் வரவேற்று பேசினார். தலைவர் ஆனந்தராஜ் தனது உரையில், கல்வி தான் தங்களை உயர்வான இடத்தில் வைத்துள்ளது. எனவே மாணவர்கள் நன்கு படித்து எங்களை விட சிறந்த பொறியாளர்களாக உருவாக வேண்டும் என்று கூறினார்.
பின்னர் மாணவ மாணவிகள் 70 பேர்களுக்கு ஸ்கூல் பேக், சிலேட், பேனா மற்றும் இனிப்புகள் வழங்கி பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில் திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்க துணைத்தலைவர் முருகபெருமாள், ஒருங்கிணப்பாளர் சுந்தர், துணைச்செயலாளர் லிங்கராஜ், ஆலோசகர் ஆண்ட்ரூ ஜேசன், ஆசிரியைகள், பெர்ஸிபாலா, பவித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் முன்னாள் பொருளாளர் ராபின் நன்றி கூறினார்