கடலூர் செப், 13
திட்டக்குடி அருகே உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம் கடந்த 1922-ம் ஆண்டு கட்டப்பட்டது. வெலிங்டன் நீர்த்தேக்க கரையில் விரிசல் ஏற்படுவதை தடுக்கவும், நீர் கசிவை தடுக்கவும் சீரமைப்பு பணி மேற்கொள்ள ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் மத்திய அரசு அணை மேம்பாட்டு புரணமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற நீர்வளத்துறை அதிகாரி மிட்டல் தலைமையிலான திருமுறாரி ரத்தினம், ஸ்ரீ வஷ்டவா, ருஸ்தா அலி, திருச்செல்வம் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் பர்கத் நிஷா, வெள்ளாறு வடிகால் கோட்ட பொறியாளர் அருணகிரி, செயற்பொறியாளர்கள் வீரலெட்சுமி மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் உடன் இருந்தனர்.