Spread the love

நெல்லை செப், 13

உயர்கல்வி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் நெல்லை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் முயற்சியிலே அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஹரிஷ் 680 மதிப்பெண்கள் பெற்றுப் பள்ளியில் முதலிடத்தையும், தேசிய தர வரிசையில் 713வது இடத்தையும் பெற்று சாதனை புரிந்துள்ளார். லட்சுமி காயத்ரி 676 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2ம் இடத்தையும், 665 மதிப்பெண்கள் பெற்று சாக்கேத்தராமன் 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து 650 மதிப்பெண்ணிற்கு மேல் 4 மாணவர்களும்,600 மதிப்பெண்ணிற்கு மேல் 6 மாணவர்களும், 550 மதிப்பெண்ணிற்கு மேல் 11 மாணவர்களும் 500க்கு மேல் 19 மாணவர்களும் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

இம்மாணவர்கள் அனைவரும் தங்களது முதல் முயற்சியிலேயே இம்மதிப்பெண்களைப் பெற்றுச் சாதனை புரிந்துள்ளனர்.நீட் தேர்வில் மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன், பள்ளியின் முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *