சேலம் செப், 13
சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 11 நான்கு சக்கர வாகன மற்றும் 138 இருசக்கர வாகனங்கள் என 149 வாகனங்கள் சேலம் மாவட்ட ஆயுதப்படை மைனாதனத்தில் மைதானத்தில் வரும் 16ம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து வாகனங்களை 13 ம் தேதி காலை 10 மணி முதல் ஆயுதப்படை மைதானத்தில் நேரம் நேரில் பார்த்து ஏலம் எடுக்க விரும்புவர்கள் நான்கு சக்கர வாகனங்களுக்கு 10000 ரூபாய் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு 5000 முன்பணம் கட்டி ரசீதை பெற்றுக் கொள்ளலாம். முன்பணம் செலுத்தியவர்கள் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்படுவார் என சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.