திருவள்ளூர் செப், 13
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு மாற்றுப்பாதை அமைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பலமுறை நேரில் சென்று ஆய்வு செய்து வந்தார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் தொடர்புடைய துறைகளின் அனுமதி பெறுதல், விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் கலந்தாய்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்று அதிகாரிகள் மாற்றுப்பாதை அமைப்பது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.