அரக்கோணம் செப், 13
ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பாமக. ஆலோசனைக் கூட்டம் அரக்கோணத்தில் நடந்தது. ராணிபேட்டை கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அரக்கோணத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். அரக்கோணம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பாமக. மாவட்ட செயலாளர்கள் சரவணன், முரளி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் வருகிற 17ம் தேதி வாலாஜாபேட்டைக்கு வருகை தரும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும். கிராமங்கள் தோறும் திண்ணைப் பிரச்சாரம் செய்து பாமக.வின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். தற்போது உள்ள அரசு சட்ட விதிகள் படி 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டினை உடனே வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும என்பன உள்பட பல்வே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.