ஈரோடு செப், 11
அந்தியூர் தாலுகாவுக்கு உள்பட்ட கத்தரிமலையில் 75 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களுக்காக சூரிய ஒளியில் இயங்கும் மாவு அரவை எந்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான நிதி வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் மாவு அரவை எந்திரம் அமைப்பதற்காக கனரா வங்கியின் சார்பில் ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி ஆஸ்கர் நிறுவனத்தினரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.