Spread the love

வள்ளியூர் செப், 10

நெல்லை மாவட்டம்
ராதாபுரம் அடுத்த பரமேஸ்வரபுரம் கக்கன் நகரில், நேற்று காலை தென்காசியில் இருந்து கனரக வாகனத்தில் தும்பு ஏற்றி பரமேஸ்வரபுரத்தில் அமைந்துள்ள தும்பு கம்பெனிக்கு வந்த நிலையில் ராதாபுரம் கக்கன்நகர் அருகே வந்துகொண்டிருந்த போது திடீரென லாரி புகைமூட்டத்துடன்தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனைக் கண்ட ஓட்டுநர் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி தீயை அணைக்க முயற்சித்து நிலையில் தீ காற்றின் காரணமாக வேகமாக எரிய தொடங்கியது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் வள்ளியூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர்.மேலும் தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் எரிந்து கொண்டிருந்த லாரி மீது தண்ணீர் பீய்த்து அடித்து முற்றிலுமாக தீயை அணைத்தனர். இதில் லாரி தும்புடன் சேர்ந்து எரிந்ததில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இந்த சம்பவம் குறித்து ராதாபுரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் காற்றின் காரணமாக சாலையின் மின்வயரில் உரசியதால் லாரியில் தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *