சேலம் செப், 10
நாளை மறுநாள் சசிகலா சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திங்கட்கிழமை காலை தஞ்சையிலிருந்து திருவையாறு, திருமானூர், கீழப்பலூர், அரியலூர், பெரம்பலூர் வழியாக சேலம் மாவட்டம் வீரகனூர் வருகிறார்.
தொடர்ந்து ஆத்தூர் பஸ் நிலையம், புத்திரகவுண்டன் பாளையம், வாழப்பாடி பஸ் நிலையம் அருகில் தொண்டர்களை சந்திக்கிறார். பின்னர் சேலம் 4 ரோடு பகுதிக்கு வரும் அவர் அண்ணா பூங்காவில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து 13ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் அரியானூரில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அரியானூரிலிருந்து மகுடஞ்சாவடி, சங்ககரி-எடப்பாடி பிரிவு, நாமக்கல் மாவட்டம் வெப்படை, பள்ளிப்பாளையம் பகுதிகளில் கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திக்கிறார். பின்பு அவர் ஈரோடு மாவட்டத்துக்கு செல்கிறார்.
இதனிடையே எடப்பாடி பகுதியைச் சேர்ந்த அதிமுக முக்கிய பிரமுகர் சுரேஷ் தலைமையில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த வரவேற்பில் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.