நெல்லை செப், 9
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரன், தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.